சாத்தானின் பெயரும் சிலுவை அடையாளமும்
07-ஆகஸ்ட்-2008.
தென் அசீட்டியா,
ஜார்ஜியா.
ஐந்நூறு ரஷ்யப் படையினர் தென் அசீட்டியாவுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் அமைதிப் படைகளா, ஆக்கிரமிக்க நுழைந்திருக்கும் படைகளா என்பது தெரியவில்லை. சில மாதங்களாகவே இருதரப்புக்கும் ராணுவ மோதல்கள் நடந்து வந்தன. பீரங்கிகளையும் ராக்கெட் லாஞ்சர்களையும் அங்கு கொண்டு சேர்ந்திருந்தது ஜார்ஜியா.
அசீட்டியா, அப்ஹாஸியா இரண்டும் ரஷ்ய எல்லையோர ஜார்ஜிய நகரங்கள். ரஷ்ய ஆதரவாளர்கள் நிறைந்த பகுதிகள். மக்களின் விருப்பப்படி அவர்களை ஜார்ஜியாவிலிருந்து விடுவிக்க வேண்டும், தனிக் குடியரசாக அறிவிக்க வேண்டும் என்பதே ரஷ்ய அரசின் நிலைப்பாடு. அமெரிக்கா, கொசோவோ நாட்டு மக்களுக்கு அளித்த விடுதலையை ரஷ்யா இந்நகரங்களுக்கு அளிக்க விரும்பியது.
ரஷ்யப் படைகள் நுழைந்த தகவல் ஜார்ஜியாவின் அதிபர் மிக்கேல் சாக்காஷ்விலிக்குத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வேளையில் தனது செல்வாக்கை நிறுவத் தீர்மானித்தார் அவர். அன்று நள்ளிரவு அசீட்டியாவின் தலைநகரான சின்வாலி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இது ரஷ்யாவைப் பதிலுக்குத் தூண்டிவிடும் என்று தெரிந்தே உத்தரவிட்டார்.















Add Comment