‘காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக் காணும்வரை.
கச்சோரி கொடிதென்று சொன்னேன் ராஜ் கச்சோரி உண்ணும்வரை.’
எனக்குத் தெரிந்த கச்சோரிகள், லட்டுக்களின் அளவில் கடிக்கவே சிரமப்படுத்தும் ஒரு வஸ்துவாக இருந்தன. கடித்தபின் உள்ளிருக்கும் பூரணமாவது நம்மை சாந்தப்படுத்த வேண்டும். அதுவும் இல்லை. காரம், புளிப்பு, மசாலா சேர்த்த வறண்டு போன உருண்டையில் மருந்துக்கு இனிப்பு தெரியும். மசாலா கச்சோரி என்றால் அதுவும் இருக்காது.
இப்படிப்பட்ட வஸ்துவை மும்பை ஸ்பெஷல் என்ற பெயரில் உறவுகள் வாங்கி வருவார்கள். அதற்கு எங்கள் ஸ்பெஷலாகக் கொடுத்தனுப்பும் பொரியும் அதிரசமுமே மேல் என்று நினைத்துக்கொள்வேன். அன்று ராஜ் கச்சோரியைச் சுவைக்கும்போதுதான் உண்மை புரிந்தது.















Add Comment