Home » இவன் வேற!
ஆண்டறிக்கை

இவன் வேற!

ரிஷி ரமணா

எழுத்தாளனாக இது என்னுடைய முதல் ஆண்டறிக்கை. அது ஒன்றே இந்த நிமிடத்தில் நான் மகிழ்ந்திருக்கப் போதுமானதாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் புதிதாகப் பிறந்தேன் என்றுகூடச் சொல்லலாம். ‘மெட்ராஸ் பேப்பர்ல எழுதுங்க’ என்று ஆசிரியர் பாரா சொன்ன நாள்முதல் என் அன்றாடங்கள் நிறம் மாறின. ஓராண்டில் நான் கடந்துவந்த பாதையை இப்போது திரும்பிப் பார்க்கிறேன். மலைப்பாக இருக்கிறது.

இந்த ஆண்டு பிறப்பதற்கு முன்பே, மெட்ராஸ் பேப்பரில் தடயம் தொடருக்காக ஏழு அத்தியாயங்களை எழுதியிருந்தேன். இந்த ஆண்டறிக்கையோடு மெட்ராஸ் பேப்பரில் ஐம்பத்தைந்து கட்டுரைகளை இவ்வாண்டில் எழுதியுள்ளேன். அறிவியல் என்ற குறுகிய வட்டத்துக்குள் முடங்கிக்கிடந்த என்னை அதிலிருந்து வெளிக்கொணர்ந்தார் ஆசிரியர். தேசிய நடப்புகள், உலக நடப்புகள், வரலாறு, வாழ்வியல் என்று பல தளங்களில் எழுத ஊக்கம் தந்தார். இந்தத் தொடர் கட்டுரைப் பயிற்சி எனக்கே தெரியாமல் என் எழுத்தைச் செதுக்கியிருந்தது.

பிப்ரவரியில் ஆசிரியருடைய எழுத்துப் பயிற்சி வகுப்பில் பயின்றேன். என்னளவில் அதை ஒரு தீட்சையாகக் கருதுகிறேன். எழுத்து தொடர்பான அத்தனை அடிப்படைப் பாடங்களையும் கற்பித்தார் ஆசிரியர். அந்த வகுப்பு எனக்குப் பல திறப்புகளைக் கொடுத்தது. எழுத்தின் அடிப்படை சூட்சுமங்கள் புரிந்தன. ‘எழுத்தாளனுக்கு வாசகன்மீது கருணை வேண்டும். கரடுமுரடாக எழுதி, படிப்பவனுடைய பல்லை உடைக்கக் கூடாது. படிக்கும்போது வாசகனுடைய சிந்தைக்குள் வழுக்கிக்கொண்டு செல்வதுதான் நல்ல எழுத்து’ என்ற ஆசிரியரின் போதனையை என் பிரதானப் படிப்பினையாக எடுத்துக்கொண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!