4 சஞ்சலம்
வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான்.
டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய் சுந்தரேசனைப் பார்த்து, ‘நான் பாபா ஆம்தேவின் சைக்கிள் பயணத்தில் வருகிறேன் என்பதை, ஆபீஸில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கிறார்கள்’ என்று சொன்னான்.
‘அவ்வளவுதானே, பாபாவே எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டபின், அதைக் கடிதமாகக் கொடுப்பதில் என்ன இருக்கிறது’ என்று KNIT-INDIA MOVEMENT பாபா ஆம்தே என்று போட்டிருந்த லெட்டர் ஹெட்டில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான சைக்கிள் ரேலிக்கு, கே கே நகர் 13/7 CPWD குடியிருப்பில் வசிக்கும் C. நரசிம்மன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று எழுதி சுந்தரேசன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு எனக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். கதர் வேஷ்டி கதர் சட்டையில் இருந்த அவர் காந்தியின் ஆசிரமத்தில் இருப்பவரைப்போல அவன் கண்ணுக்குத் தெரிந்தார்.
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment