12 அறிவுரை
விவேகானந்தர் பாறைக்குப் படகுப் பயணம் போய்வந்த பின், தாமதமாக உண்ட மதிய உணவின்போது அன்றைக்கு அவ்வளவுதான். ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார்கள். உடனடியாகச் சுந்தர ராமசாமிக்கு போன் பண்ணி நாகர்கோவிலுக்கு வருவதாகச் சொன்னான்.
‘தாராளமா வாங்கோ. இங்க ஒருத்தர் உங்களைச் சந்திக்க ஆர்வமா இருக்கார்’ என்றார்.
அவனைக் குஷிப்படுத்தத்தான் சுந்தர ராமசாமி அதைச் சொன்னார் என்றாலும் யாரிது சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல. ராமசாமியைப் பார்க்கக் கிடைத்த அதிருஷ்ட வாய்ப்பு எனப் பார்த்தால் அந்த நேரம் பார்த்தா முன்பின் தெரியாத யாரோ வரவேண்டும் என்று இவன் அதை இடைஞ்சலாகத்தான் பார்த்தான். ஆனால், அதைச் சொன்ன ராமசாமியின் குரலில் குறும்பான மகிழ்ச்சி தெரிந்தது. பிடித்தவர்களைக் குஷிப்படுத்திப் பார்ப்பதில் ராமசாமிக்கு நிகர் ராமசாமிதான். அதில் சந்தேகமேயில்லை.
Add Comment