34 நிகண்டு
ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக வெடுக் வெடுக்கென சரளமாக விட்டெறிந்து பேசும் நாயர், வீம்பாகச் சொல்லிவிட்டுப் போனாலும் உள்ளூர பொறாமையில்தான் பேசுகிறான் என்பது இவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஒருவன் ஒருத்தியை அன்பாலோ வசீகரத்தாலோ வென்றெடுப்பது சிலருக்குக் கிளுகிளுப்பையும் முன்பின் தெரியாதவர்களுக்குக்கூட வயிற்றெரிச்சலையும் ஒருசேரக் கிளப்புகிறது. தன்னால் முடியாததை அடுத்தவன் செய்வதைப் பார்க்கையில் பொறாமையாகப் பிறப்பது, வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நாயக பிம்பமாக்கி அவனை உள்ளூர ஆராதிக்கிறது.














Add Comment