Home » சக்கரம் – 47
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 47

47 அப்ளா மானுஸ்

 

எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும் என அவன் கனவில்கூட நினைத்ததில்லை. எங்கே என்ன தின்றாலும் எப்படிச் சுற்றினாலும் வருஷத்துக்கு ஒருமுறை வந்து நான்கைந்து நாட்கள் இருந்து இரண்டு நாட்கள் மூக்கை உறிஞ்சவைத்துப் படுத்திவிட்டுப் போகிற ஜலதோஷத்தைத் தவிர வியாதி என எதுவும் வந்து ஓரமாய் உட்கார நேர்ந்திராதத் தனக்குப் போய் இப்படி ஆகிவிட்டதே என்கிற கழிவிரக்கத்தில் முட்டிக்கொண்டு வந்தது.

எல்லோரிலிருந்தும் தன்னை வித்தியாசமானவனாக இவன் நினைத்துக்கொண்டாலும் எல்லோரையும்போல இவனும் வலக் கையன்தான் என்பதால் கழுவிக்கொள்வதைத் தவிர இடக்கையை எதற்கும் பயன்படுத்தாதவன். வாங்குவதோ கொடுப்பதோ எதுவாக இருந்தாலும் அதை இடக்கையில் செய்யக்கூடாது என்று பிஞ்சிலிருந்தே சொல்லிச் சொல்லி வளர்த்த அம்மா காரணமாக இடக்கையை உபயோகிப்பதென்பது அரிதிலும் அரிதாகிவிட்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!