உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தின் மீது பதிவுசெய்த ஒரு வழக்கு.
இந்த 88 பக்கக் குற்றப்பத்திரிகை 2010-ம் வருடத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், தான் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன், 2010-ஆம் ஆண்டில் பரிமாறிய ஒரு முக்கிய மின்னஞ்சலில், ஆப்பிள் இன்க் விதிகள் மாற்றப்படுகிறது.. பில் ஸ்கில்லேர் (Phil schiller ), ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதி ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார்.
“இன்று நான் அமேசான் கிண்டில் விளம்பரத்தை பார்த்தேன். அதில், ஒரு பெண்மணி ஐபோனில் கிண்டில் புத்தகம் வாங்குகிறார், அதனை படித்துக் கொண்டிருக்கையில் , தனது ஆண்ட்ராய்டு போனை எடுத்து , ஐபோனில் விட்ட அதே இடத்திலிருந்து படிக்கிறார்.”
Add Comment