Home » பொய்யோடு விளையாடு – 23
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 23

குற்றம் காட்டும் கூற்றுகள்

சங்கடமான கேள்விகளை எழுப்பும்போது, அதற்கு ஏற்கெனவே பதிலளித்துவிட்டதாகப் பொய்யர் கூறலாம். இந்த வகை ஏமாற்று உத்திகளை ‘மேற்கோள் காட்டும் கூற்றுகள்’, அதாவது, Referral Statements என்கிறார்கள். நம்பகத்தன்மையை உருவாக்குவதே இவற்றின் நோக்கம்.

இது ஒரு நுட்பமான உளவியல் தந்திரம். பெரும்பாலான மக்கள் உணர்வதைவிட இது மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த நபர் உண்மையைப் பேசுகிறாரா என்று நமக்கு உறுதியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திரும்பத் திரும்பக் கூறும்போது நம்முடைய எதிர்ப்பு தளர்கிறது.

உதாரணத்துக்கு, உங்கள் தோழியுடன் அலுவலக கேண்டீனில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு முன் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவப் போகிறார் தோழி. சற்றுநேரம் கழித்துத் திரும்பி வந்தவர், ‘உனக்கு விஷயம் தெரியுமா?’ என்று பீடிகையுடன் பேச்சைத் தொடங்குகிறார்.

‘கேண்டீனுக்கு வெளிய ஐஸ்வர்யா ராய், சச்சின் டெண்டுல்கர், ரஜினி, கமல், விஜய், அஜித், விராட் கோலி, ஸ்ம்ருதி மந்தனா, ஸ்ரேயா கோஷல், நயன்தாரா எல்லாரும் வந்துருக்காங்க’ என்கிறார் தொடர்ந்து.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!