Home » தீபாவளி: தையல் கடை முதல் ‘புக் மை ஷோ’ வரை
திருவிழா

தீபாவளி: தையல் கடை முதல் ‘புக் மை ஷோ’ வரை

அந்த டெய்லர் கடை வருடம் பூராவும் அழுது வடியும். ஆனால் தீபாவளி நெருங்க நெருங்க அவரைப் பிடிக்க முடியாது. மடித்துக் கட்டப்பட்ட கைலி, முண்டா பனியன், கழுத்தில் மாலையாகத் தொங்கும் டேப், தலையிலிருந்து இரண்டடி உயரத்தில் சுழலும் குட்டி ஃபேன், துணிகளில் கோடு கிழிக்க ஒரு சின்ன சோப்புக் கட்டி எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார். மடித்து வைக்கப்பட்டுள்ள சட்டைகளில் நம்முடைய சட்டைகளும் இருக்கிறதா என்று சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கிறதே, என்ன அவசரம்?’ என்று சிரித்துக் கொண்டே அவர்களை விரட்டுவார்.

பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடைகள்தான் ஆண்டு முழுவதும். புத்தாடைகள் வாங்குவதற்கு இரண்டே காரணங்கள். ஒன்று பிறந்த நாள், மற்றொன்று தீபாவளி. பிறந்தநாள் பள்ளி நாளாக இருந்தால் அந்த வாய்ப்பும் பறிபோகும். புதிய ஆடைகள் அணிய நிச்சயமான ஒரே வாய்ப்பு தீபாவளிப் பண்டிகைதான்.

இஸ்திரி செய்யப்பட்ட உடைகளைத் தீபாவளியன்று மட்டுமே அணிய முடியும் என்பது ஒரு காலம். புதிய உடைகளின் வாசனை பார்ப்பதே ஒரு சுகம். மடங்க மறுத்து நிற்கும் காலர்கள், ஓடிச் செல்லும்போது கன்னத்தில் படபடவென அடிக்கும். புதிய டிராயர்களின் கால்களில் பெரிதாக இடம் விட்டுத் தைத்திருப்பார்கள். நீண்ட நாட்கள் வைத்துப் போட வேண்டும் அல்லவா!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!