Home » போட்டிக்கு போட்டி, யாருக்கு வெற்றி?
உலகம்

போட்டிக்கு போட்டி, யாருக்கு வெற்றி?

வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவிலிருக்கும் நாடுகளில் ஒன்று எல் சால்வடோர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு அடிப்பகுதியில், கரீபியன் கடலில் அமைந்துள்ள நாடு ஹைத்தி. சம்பந்தமில்லாத இந்த இரண்டு நாடுகளுக்கு நடுவில் உலகைத் திருப்பிப்போடும் சண்டை நிகழவுள்ளது.

எல் சால்வடோர் அதிபர் நயீப் புகேலே, ஹைத்தி நாட்டின் ஆயுதக் கும்பல்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை அல்ல. மக்களுடன் நடக்கும் சண்டையும் அல்ல. ஹைத்தி நாட்டைப் பாடாய்ப்படுத்தும் ஆயுதக் கும்பல்களுடன் மட்டுமே சண்டை என்பதையும் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார் புகேலே.

மத்திய அமெரிக்காவிலேயே மிகச் சிறிய நாடு எல் சால்வடோர். மக்கள்தொகை வெறும் அறுபது லட்சம்தான். பத்து வருடங்களுக்கு முன்னர், இவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் சமூக விரோதக் குழுக்களில் இருந்தனர். அதனால், உலகின் கொலை விகிதப் பட்டியலில் எல் சால்வடோர் முதல் சில நாடுகளில் ஒன்றாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!