Home » 24 – இருபத்து மூன்று
24 • தொடர்கள்

24 – இருபத்து மூன்று

24

தத்துவமும் போர்க்களமும்

(மார்கஸ் அரேலியஸ்)

கி.பி நூற்று எழுபதாம் ஆண்டு. டானூப் நதிக்கரையில் பனி உறைந்த இடத்தில் போர்க்கள முகாம்கள் இருந்தன. இரவின் சாயலோடு விடிய ஆரம்பித்திருந்தது. தோல் கூடாரத்தின் இடுக்கு வழியே வீசிய பனிக் காற்று, விளக்கில் எஞ்சியிருந்த சின்னஞ்சிறு சுடரையும் அணைத்தது. கம்பளி ஆடைக்குள் ஒடுங்கியிருந்த ரோமானியப் பேரரசர் மார்கஸ் அரேலியஸ் கண் விழித்தார். படுக்கையின் கதகதப்பை விட்டு வெளியேற உடலும் மனமும் தயங்கின. போரை ஜெயிக்கும் வெறியோ பேரரசின் அதிகாரமோ அவருக்கு எழ ஊக்கமளிக்கவில்லை.

உலக வரலாற்றில் தத்துவச் சக்ரவர்த்தி (Philosopher King) என்று இன்றும் போற்றப்படுபவர். மாபெரும் ரோமானியப் பேரரசை ஆண்ட ஐந்து நல்லரசர்களில் கடைசி அரசர். அரியணையும் அளப்பரிய அதிகாரமும் கையில் இருந்தபோதும், எளிமையையும் கட்டுப்பாட்டையும் தன் வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்தவர். போர்க்களக் கூடாரங்களில் அமர்ந்து அவர் தன் ஆத்மார்த்த சிந்தனைகளாக எழுதிய ‘மெடிடேஷன்ஸ்’ (Meditations) என்ற தத்துவ நூல் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

கண்களை மூடித் தன் மனத்துக்குள் பேசத் தொடங்கினார். ‘படுக்கையை விட்டு எழச் சோம்பல்படுகிறேனே, இது சரியா? ஒரு மனிதனாக என் கடமைகளைச் செய்யத்தானே பிறந்துள்ளேன்? அதற்குத்தானே விழித்தெழுகிறேன்? இதற்குள் பலவீனமாக நினைக்கிறாயே’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு முன் வாழ்ந்த கிரேக்க ஸ்டோயிக் தத்துவஞானி எபிக்டீட்டஸின் (Epictetus) போதனைகள் ஞாபகத்துக்கு வந்தன. சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!