நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம், தொழில்முனைவோருக்கான தளம் எனப் பல்வேறு வசதிகளை ‘பெரியார் அறிவுலகம்’ என்ற ஒரே கட்டடத்தில் ஒன்றாகக் கொண்டுவந்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு இதன் பணிகளை ஆரம்பித்தது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இக்கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
கோவை மத்தியப் பேருந்து நிலையத்துக்கு எதிரே, சிறைத்துறைக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் இடத்தில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறையின் பொறுப்பில் சுமார் முந்நூறு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் அறிவுலகம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள இந்த நூலகத்தில் தரைத்தளத்தைச் சேர்த்து எட்டு மாடிகள் உள்ளன.
கோவை கல்வி, தொழில்துறைக்குப் புகழ்பெற்ற நகரம் என்பதால், கட்டட வடிவமைப்பில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகச் சொல்கின்றனர் வடிவமைப்பாளர்கள். ‘கட்டடத்தின் வடிவமைப்பு திறந்த புத்தகத்தை போன்று இருக்கவேண்டும் எனத் திட்டமிட்டு உருவாக்கினோம்’ என்று கூறியிருக்கிறார் இதன் வடிவமைப்பாளரான பொன்னி. நூலகத்தையும் அதன் வசதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.















Add Comment