Home » நல்லது கெட்டது – 12
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 12

மைக்ரோசாப்டின் ஆட்குறைப்பு: கெடுதலில் ஒரு நன்மை?

2026 அக்டோபரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய 2,23,000 ஊழியர்களில் சுமார் 60,000 பேருக்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள், விரும்பினால் உடனடியாகப் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்றாற்போல அவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்கிறது அந்த அறிவிப்பு.

இதற்கு முன்பாக 2026 ஏப்ரலில் மைக்ரோசாப்ட் தனது அமெரிக்க ஊழியர்களில் 8,750 பேருக்கு இதேபோன்ற ஒரு வாய்ப்பை அளித்திருந்தது. அது வந்த ஆறு மாதங்களில் அதைவிடப் பெரிய எண்ணிக்கையில் வந்துள்ள இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்தத் தொழில்நுட்பத் துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஃபேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 2026 ஏப்ரலில் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. 2026 மே மாதம் முடிந்த நிதியாண்டில், ஆரக்கிள் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 21,000க்கும் மேலாகக் குறைந்திருந்தது. இது சமீப ஆண்டுகளில் நடந்த பெரிய பணி நீக்கம் என்று பார்க்கப்படுகிறது.

இந்தப் பணி நீக்கங்களின் காரணங்கள் என்ன? இவற்றால் கெடுதல் மட்டும்தானா, ஏதாவது நன்மைகளும் உண்டா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!