Home » அழகுசாதனச் சந்தையின் அரசி
ஆளுமை

அழகுசாதனச் சந்தையின் அரசி

சிமோன் டாடா

இந்திய அழகுசாதனச் சந்தையின் அரசி என்று அறியப்படுபவர் சிமோன் டாடா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சிமோன், கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தனது 95ஆவது வயதில் மறைந்தார். லேக்மே, ட்ரெண்ட் (தற்போது வெஸ்ட்சைட்) நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் சிமோன். நாவல் டாடாவின் மனைவி, தற்போதைய டாடா குழும சேர்மன் நோயல் டாட்டாவின் தாய். நாற்பது ஆண்டுகளாக இந்தியாவின் அழகுசாதனங்கள், சில்லறை விற்பனை துறைகளில் முதன்மைப் பங்காற்றி வந்தவர்.

சிமோன் டியூனாயர் என்ற இயற்பெயருடன் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர், ஜெனிவாவில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு 1953ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணியாக முதல் முறை இந்தியா வந்தார் . வந்த இடத்தில் நாவல் டாடாவுடனான சந்திப்பும், 1955ஆம் ஆண்டு அவ்விருவருக்குத் திருமணமும் நடைபெற்றது. அதன்பிறகு அவருக்கு மும்பை நிரந்தர வசிப்பிடமானது.

இந்தாண்டில் இந்திய அழகுசாதனச் சந்தையின் மதிப்பு இருபத்தி நான்கு பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது . 1961இல் டாடா குழுமத்தில் சிமோன் பொறுப்பேற்றபோது நிலைமை முற்றிலும் வேறு. அப்போது அழகுசாதனப்பொருட்கள் அனைவருக்குமானவை அல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!