Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 19
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 19

ஓட்டாகாத கூட்டம்

சிரஞ்சீவியின் மிகப்பெரிய வெற்றிப் படமான கைதி வரும்போதே என்.டி.ஆர் திரையுலகை விட்டு விலகிவிட்டார். அதனால் அவருடைய வழி காலியாக இருக்கவே, சிரஞ்சீவி ராஜபாட்டையில் நடை போட ஆரம்பித்தார். சிரஞ்சீவியைப் பொறுத்தவரை நட்சத்திர அந்தஸ்து மிக முக்கியமான ஒன்று. தனக்கான ரசிகர்கள் ஆதரவு, அவர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அவர் பெயரில் மட்டும் எட்டு புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதிலொன்று அவருடைய மைத்துனர் அல்லு அரவிந்த் நடத்திய வார இதழ்.

‘ஒரே மாதிரி மசாலா படங்களில் மட்டுமே நடிக்கிறீர்களே, வேறு வேடங்களில் நடிக்கமாட்டீர்களா அல்லது பிடிக்கவில்லையா இல்லை நடிக்க வராதா?’ என்று ஒரு நிருபர் கேட்டார். ‘எந்த வேடமானாலும் நடிப்பது ஒரு நடிகனின் கடமை. ஆனால் என்னுடைய படங்களை நம்பி கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. அதை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அதில் நான் எந்தவிதமான ரிஸ்கும் எடுக்கமாட்டேன். நீங்கள் சொல்வது போலக் கலைப் படங்கள் எடுக்க வேண்டும் என்றால் அதை என்னுடைய சொந்தப் பணத்தில் எடுப்பேன். இப்போதைக்கு அதற்கான நேரம் இல்லை’ என்று சொன்னார்.

கே விஸ்வநாத், பாலசந்தர் உள்ளிட்ட பல பெரிய இயக்குநர்கள் இயக்கத்தில் சில படங்களில் நடித்தாலும், சோதனை முயற்சியில் அவர் இறங்கவே இல்லை. அவர் அந்த ஊரின் மிகப்பெரிய மெகா ஸ்டார். ஆனாலும் மற்ற மொழிகளின் ரீமேக் படங்களில் நடிப்பதில் அவர் தயக்கம் காட்டியதில்லை. அது எந்த நடிகர் நடித்ததாக இருந்தாலும் சரி. ரஜினி, அஜீத், விஜய் என யார் நடித்த படங்களாக இருந்தாலும் அவர் தயக்கம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!