ஃபன்-பார்ட்னர் பிரியாணி வேண்டுமா என்று உங்களைக் கேட்டு நாளாகிவிட்டது. இப்போதே பிணக்கைத் தீர்த்துக் கொள்வோம். ஒரு பிரியாணி சொல்லட்டுமா? காபி மட்டும் காலை உணவு ஆகிவிடாது. உங்கள் டம்மியை யம்மியான உணவால் நிரப்புங்கள் எங்களுக்கு ரொம்ப வருத்தம்பா… இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு நேரத்துக்கு ஆர்டர் பண்ணலன்னா...
Tag - காயத்ரி ஒய்
எட்டு விநாடிகள் கறுப்பு, வெள்ளை, நீலம் என ஏதோ ஒரு நிறம் காதுத் துளைக்குள் பொருந்தியிருக்கும். கவனம் முழுவதும், ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்த செல்பேசியில் குவிந்திருக்கும். வாட்சப் குளத்தில் கட்டைவிரல் மீன் போல லாகவமாக நீச்சலடிக்கும். பதில் வரும்வரை காத்திராமல் அடுத்த நொடி இன்ஸ்டாவுக்குத் தாவும்...
பணமில்லாத பர்ஸ் ஷேர் ஆட்டோக்களில் ஆரம்ப டிக்கெட் விலை இப்போது பத்து ரூபாய். பாரிஸ் கார்னர் அலுவலகத்துக்கு மாற்றலாகியபின் தினமும் ஷேர் ஆட்டோவில்தான் பயணம். ‘அவர்களிடம் மீதிப் பணத்தைக் கேட்டு ஆட்டோவை நிறுத்தி வைத்துச் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியாது. எப்போதும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொள்...
ஹால்யு தென் கொரியாவில் ஒரு பெரிய ஃபேஷன் நிறுவனத்தின் தலைவியாக இருக்கிறாள் யூன் சே-ரி. ஒருமுறை பாரா கிளைடிங் செய்யும்போது புயலில் மாட்டிக்கொண்டு, வட கொரிய எல்லையில் தரையிறங்குகிறாள். அவளைப் பார்க்கும் ராணுவ வீரன், அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்காமல் தனது கிராமத்தில் ஒளித்து வைத்து, தாய்நாட்டுக்குத்...
சந்தனக் கூடு ஊர்வலமும் சபரிமலையும் மெட்ரோவில் பார்த்த ஒரு ஜென் ஸீ பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம், ‘பாலியில் சூரிய உதயம், கோவா கடற்கரை, சொகுசுக் கப்பலில் பயணம்.’ சுற்றுலா எப்படியிருக்கும் என்று கேட்டிருந்தால் ஒரு வருடத்துக்கு முன் நானும் இதைத்தான் சொல்லியிருப்பேன். மீட்டிங், டெட்லைன்கள்...
விடுமுறையை உருவாக்குபவள் முதுகுப்பையில் உடைகளுடன் சேர்த்து லேப்டாப்பையும் உள்ளே திணித்தாள் நித்யா. ‘ஃபிரண்ட்ஸோட சேர்ந்து வெக்கேஷன் போறேன்னு சொன்ன. இந்தச் சனியனையும் எதுக்கு தூக்கிட்டுப் போற?’ ‘வெக்கேஷன் இல்லம்மா… வொர்க்கேஷன்னு சொன்னேன்.’ ‘என்ன கருமாந்திரமோ… மூணு...
பக்கவாட்டுப் பணிகள் எங்கள் ஊரில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில்தான் அலுவலகம். மேஜையின் ஓரத்தில் கார்டு, இன்லாண்டு கவர், கோந்துப் பசை இருக்கும். பின்னால் ஒயர்பின்னல் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். மூன்றரை மணிக்குள் அலுவலகத்தை மூடி விடுவார். அவருக்கு எலக்ட்ரிக்கல்...
சத்தம் போடாமல் விட்டு விலகு *அலுவலகத்தில் ஒரு கான்ஃபரன்ஸ் கால். உடன் வேலை பார்ப்பவர்கள் ஒரு பிரச்சினையைச் சொன்னார்கள். அந்த விஷயத்தைப் பற்றி வைஸ் பிரசிடெண்ட்டுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் ஒரு யோசனையை முன்வைத்தார். கால் முடிந்தபிறகு என்னைத் தனியாக அழைத்து அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம்...
கொடுத்த காசுக்குக் கூவுதல் ‘பன்னெண்டு எல் தரான், அசால்ட்டா வேலையை விடறேங்குது. எனக்கெல்லாம் அந்த சம்பளம் வர்றதுக்கு இருபது வருஷம் ஆச்சு. பிடிச்சா ஒரே பிடிவாதமா நிக்கறா…’ ஜனனியைப் பற்றிக் கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் உஷா மேடம். ஜனனி, அவருடைய அக்கா பெண். படிப்பில் சூட்டிகை...
முறைத்துப் பார் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைத்தார்கள். மகளிர் தின விழாவை எப்படிப் புதுமையாகக் கொண்டாடலாம் என்பதுதான் அஜெண்டா. சீனியர் மேனேஜர் முதல் கடந்த வருடம் சேர்ந்த ஜூனியர் வரை எல்லாப் பெண்களும் ஒன்று கூடினோம். ‘சின்ன விஷயமாக இருக்கும், ஆனால் திடீரென்றுதான் அவற்றைத் தெரிந்து...














