கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியான ஆட்குறைப்பைச் செய்தபடி உள்ளன பல மென்பொருள் நிறுவனங்கள். இருந்தும், மைக்ரோசாப்ட், கேன்வா போன்ற நிறுவனங்கள் வழங்கிய பணிவிடுவிப்புச் சலுகைகள் பாராட்டைப் பெற்றன.
வேலையை இழப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்கான மருத்துவக் காப்பீடு, ஆறு மாத ஊதியம் போன்றவற்றை அளித்தது கேன்வா. அதோடு, ஊழியர்கள் பயன்படுத்துகிற கணினிகளையும் அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்றது.
வித்தியாசமான ஆட்குறைப்பு முயற்சியில் இறங்கியது மைக்ரோசாப்ட். தானாக வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்குக் கணிசமான இழப்பீட்டுத் தொகை, பணியாற்றிய ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு மாத ஊதியம்.
மேலோட்டமாக இது சிறப்பாகத் தெரிந்தாலும், நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்வது ஒன்றுதான். ‘ஊழியர்களே! உங்களில் சிலரின் சேவைகள் இனி எங்களுக்குத் தேவையில்லை. சென்று வாருங்கள்!’















Add Comment