Home » மதுரைப் புத்தகத் திருவிழா: ஒரு ரவுண்ட் அப்
புத்தகக் காட்சி

மதுரைப் புத்தகத் திருவிழா: ஒரு ரவுண்ட் அப்

மதுரை மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மதுரை புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நவம்பர் 13 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

அதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று காலை, புத்தகத் திருவிழா நடைபெறும் மதுரை தமுக்கம் மைதானத்துக்குச் சென்றோம். பதினொரு மணிக்கே இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

முகப்பில் வழக்கமான புத்தகக் கண்காட்சி வளைவு வைக்கப்பட்டிருந்தது. அரங்குக்கு எதிரே மாலை நேர விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் பெரிய அரங்கம் இருந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மக்கள் அமர்ந்து காலை உணவு அருந்திக் கொண்டிருந்தனர். சிலர் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். பின்னணியில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!