Home » கல்லெறிந்து கொண்டாடு!
திருவிழா

கல்லெறிந்து கொண்டாடு!

ஒருவர் மீது கல்லெறிவது வன்முறைச் செயல். கும்பலாகக் கூடிக் கல்லெறிந்தால் கலவரம். ஆனால் ஒரு கிராமத்தின் மக்கள் அனைவரும் இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து கொள்வதைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?

இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தைச் சேர்ந்த தாமி (Dhami) கிராமத்தில் இன்றளவும் இந்தத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறிய, ஆனால் பல நூற்றாண்டுக் கலாசாரப் பின்னணி கொண்ட பசுமையான கிராமம் தாமி. அழகான மலைகளும், இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடங்களும் கொண்ட பகுதி. விவசாயம் இங்குள்ள மக்களின் பிரதானத் தொழில். இந்தக் கிராமத்தின் மக்கள் தங்களது பன்னெடுங்காலப் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் வடிவம் மாறாமல் இன்றும் பாதுகாத்து வருகின்றனர். இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கைமுறை இவர்களுடையது.

தாமியை ஆண்டவர்களின் விவரங்களைப் பட்டியலாக எடுத்துப் பார்த்தால் விநோதமான வரலாறொன்று கண்ணுக்குத் தெரிகிறது. தாமி, ஆரம்பத்தில் பழங்குடி மக்கள் வசித்த நிலமாக இருந்துள்ளது. முகம்மது கோரியின் படையெடுப்பின்போது இடம்பெயர்ந்த டெல்லியைச் சேர்ந்த ராஜபுத்திர வம்ச அரச குடும்பத்தினர், ஹரியானா வழியாக சிம்லாவுக்கு வந்துசேர்ந்தனர். அங்கிருந்த ஆதிக்குடிகளை அடக்கி அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!