Home » கிளர்ச்சியும் எழுச்சியும்
உலகம்

கிளர்ச்சியும் எழுச்சியும்

காஷ்மீர் யாருடன் இணையவேண்டும் – இந்தியாவுடனா பாகிஸ்தானுடனா? என்ற கேள்வி எங்கும் எதிரொலித்தபோது, மேற்கு மாகாணங்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தன. முசாஃபராபாத், பூஞ்ச், மிர்பூர் ஆகிய மேற்கு மாகாணங்கள் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டிருந்தது ஒரு காரணம். வரலாறு, கலாசார, இன, மொழி அடிப்படையிலான ஒற்றுமையும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சார்பும் இன்னபிற முக்கியமான காரணங்கள். குறிப்பாக, மேற்கு பஞ்சாப்புடனும் வடமேற்கு எல்லை மாகாணங்களுடனும் இத்தகைய பிணைப்புகள் அதிகமிருந்தன.

உதம்பூர், கத்வா, செனானி ஆகிய காஷ்மீரின் கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் அதிகமிருந்தனர். எனவே, இயற்கையாகவே அப்பகுதிகள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. மறுபுறம், ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி செல்வாக்குச் செலுத்திய காஷ்மீர் பள்ளத்தாக்கு, மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

பள்ளத்தாக்குக்கு வடக்கே பரவியிருந்த கில்கிட் பகுதி பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. பெரும்பாலும் கரடுமுரடான மலைகளால் அமையப் பெற்ற அப்பகுதியின்மீது ஆரம்பத்திலிருந்தே இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!