சந்தனக் கூடு ஊர்வலமும் சபரிமலையும்
மெட்ரோவில் பார்த்த ஒரு ஜென் ஸீ பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம், ‘பாலியில் சூரிய உதயம், கோவா கடற்கரை, சொகுசுக் கப்பலில் பயணம்.’ சுற்றுலா எப்படியிருக்கும் என்று கேட்டிருந்தால் ஒரு வருடத்துக்கு முன் நானும் இதைத்தான் சொல்லியிருப்பேன். மீட்டிங், டெட்லைன்கள், தொடர்பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ரீல்கள் போன்ற அன்றாடச் சலிப்புகளுக்கு இடையே ஏதோ ஒரு கணத்தில் சுற்றுலாவைப் பற்றிய எண்ணம் அடியோடு மாறியது.
ஓர் இரவு, வழக்கம்போல் இன்ஸ்டா ரீல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இளைஞர்கள் கேதார்நாத்தின் மலை மீது ஏறும் ரீல் ஒன்று சட்டென்று கவனத்தை ஈர்த்தது. மழையில் நனைந்துகொண்டே சென்றாலும் எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை தெரிந்தது. நிலவொளியில் குளிக்கும் பிருந்தாவனத்தின் பிரேம் மந்திர், வாரணாசியில் ‘ஹர ஹர மஹாதேவ்’ கோஷங்களுக்கிடையே கங்கை ஆரத்தி என வரிசைக்கட்டி வந்த வீடியோக்கள் என்னுடைய சிந்தனைப் போக்கை மாற்றியமைத்தன.
பாலியில் பிரேக் எடுப்பது, கோவா கடற்கரையில் செல்ஃபி எடுத்துப் போடுவது போன்றவை வீண் செய்கைகளாகத் தோன்றத் தொடங்கின. பயணங்கள் என்றால் இவற்றையெல்லாம்விட ஆழமாக, அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். எனவே என்னுடைய பக்கெட் லிஸ்ட் முழுவதும் வாரணாசி, பிருந்தாவனம், ராமேஸ்வரம் என ஷ்ரைன்கேஷன்களாக மாற்றிவிட்டேன்.















Add Comment