தமிழகத்தின் அறுபது ஆண்டுகால இரு துருவ அரசியலை உடைத்து அரியணை ஏறிய த.வெ.க அரசு, தனது முதல் அரையாண்டை நிறைவு செய்திருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தின் நிஜமான அக்னிப் பரீட்சை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது எனச் சொல்லலாம்.
தேர்தலில் வெல்வது ஒரு கலை என்றால், ஆட்சியை நடத்துவது முற்றிலும் வேறுபட்ட ஒரு களம். அந்தக் களத்தில் புதிய அரசு இதுவரை எட்டியுள்ள மைல்கற்கள் என்ன, சறுக்கிய இடங்கள் எவை, மக்கள் மத்தியில் நிலவும் மனநிலை என்ன என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம் இது.
புதிய அரசு பொறுப்பேற்றதும் சில விவகாரங்களில் நிர்வாக வேகம் தென்பட்டதை மறுக்க முடியாது. குறிப்பாக, விவசாயக் கடன் தள்ளுபடி, காலை உணவுத் திட்ட விரிவாக்கம், பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம், தாய்மாமன் சீர் திட்டம், இலவச மின்சாரம் போன்ற அடித்தட்டு மக்களுக்கான பல நலத்திட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.















Add Comment