முப்பதாண்டுகளுக்கு முன்னர், இருபது வயது விதவைப் பெண் பிரதிக்ஷா டோண்ட்வால்கர், பாரத ஸ்டேட் வங்கியில் துப்புரவுப் பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதே வங்கியில் துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்று இன்று இயற்கை மருத்துவராகியுள்ளார்.
வங்கிப் பணியில் நிலைபெறும் முன்பும் அதன் பிறகு மருத்துவராகும் வரையும் நிதி மற்றும் தனிப்பட்ட சவால்கள் பலவற்றை அவர் எதிர்கொண்டுள்ளார். வாழ்க்கை கடினமான சூழ்நிலைகளைத் தரும்போது அதிக வலிமையானவராக மாற வேண்டும் என்பதற்கு பிரதிக்ஷா ஒரு சிறந்த உதாரணம்.
1964ஆம் ஆண்டு புனேயில் பிறந்த பிரதிக்ஷாவின் குழந்தைப் பருவம் வறுமையில் கழிந்தது. ஏழாம் வகுப்புக்கு மேல் பயில்வதற்குக் குடும்பச் சூழல் அனுமதிக்கவில்லை. பதினேழு வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
கணவர் சதாசிவ காடுவுக்கு எஸ்பிஐ வங்கியில் புக்பைண்டர் பணி. கடைநிலை பணிகளில் இதுவும் ஒன்று. கோப்புகளைப் பராமரிப்பது, அடுக்கி வைப்பது, ரசீது வழங்குவது போன்ற வேலைகள். திருமண வாழ்கை அதிக நாள் நீடிக்கவில்லை. திருமணமான மூன்றாவது ஆண்டில் சதாசிவ காடு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது பிரதிக்ஷாவுக்குக் குழந்தை பிறந்திருந்தது.















Add Comment