பி.எல்.ஏவின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல் சம்பவத்துக்கு முன்னால் பலூசிஸ்தான் என்கிற பிராந்தியத்தின் பெயர் செய்திகளில் அடிபட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?
Tag - பா. ராகவன்
பாகிஸ்தானின் தோழன் என்று சொல்லிக்கொண்டு சீனா பலூசிஸ்தானுக்குள் வந்து கடை போட ஆரம்பித்ததில் அவர்கள் உண்மையிலேயே நிலைகுலைந்துவிட்டார்கள்.
மூத்த தலைவர்கள் சிலர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. BLA அதைக் கடுமையாக மறுத்தது. ஆயினும் சாட்சியங்களும் ஆதாரங்களும் மோசடி நடந்திருப்பதையே ஊர்ஜிதப்படுத்தின.
எப்போது ஓர் இயக்கம் மக்கள் வெறுப்படையும்படியான காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறதோ, அப்போது அதன் இலக்கு சிதறிப் போகும். ஆதரித்தவர்கள் விட்டு விலகத் தொடங்குவார்கள்.
சுலைமான் தாவூத், திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இனி பலூசிஸ்தானுக்கு நானே ஆட்சியாளர். பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டது.
அதிபரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதுவும் ஒரு துணை ராணுவ முகாமின்மீது நடத்தப்பட்டிருக்கிறது. என்றால் உங்கள் பாதுகாப்பு என்ன லட்சணம் என்று ஊர் சிரித்துவிடாதா?
சோவியத் உளவாளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற போராளி இயக்கத்தைப் பிறகு வந்த தாலிபன் ஆதரித்திருக்கச் சற்றும் வாய்ப்பில்லை. ஆனாலும் எப்படி இது நடந்தது?
மார்ச் 17, 2005 அன்று தேரா புக்தியில் போர் தொடங்கியது. ராணுவம் கண்மண் தெரியாமல் ராக்கெட் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. தரைப்படை ஒரு பக்கம், ஹெலிகாப்டர் படை இன்னொரு பக்கம்.
பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயமாகக் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்ததால் அவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்கள். அங்கிருந்து கனடாவில் குடியேற விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள்.
ஜனவரி 2, 2005 அன்று ஒரு சம்பவம் நடந்தது. சரியாகச் சொல்வதென்றால் பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களின் இறுதிப் போர் தொடங்கக் காரணமான சம்பவம் அதுதான்.













