உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடந்துகொண்டிருக்கும் மகா கும்ப மேளாவுக்குத் தமது குழுவினருடன் சென்றிருக்கும் சுவாமி ஓம்கார், அங்கிருந்து மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வழங்கும் நேரடி ரிப்போர்ட் இது. மனித குல வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் இதற்கு நிகரான இன்னொரு ஒன்றுகூடல்...
Tag - ஆன்மிகம்
ஜனவரி மாதத்தின் குளிர்ந்த நள்ளிரவு. நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த இரவு சாதாரணமானதல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தனர். உடலை உறைய வைக்கும் பனி ஒரு பொருட்டல்ல. இன்னும் சில நிமிடங்களில் சாஹி ஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராடலைத் துறவிகள் நடத்தி...
ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவராகக் கருதப்படும் சட்டைமுனி சித்தர், பிறப்பால் ஒரு தேவதாசியின் மகன் என்கிறார்கள். தனது தாய், தந்தையுடன் பிழைப்புக்காக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சட்டைமுனி சித்தர் வயல்வெளிகளில் விவசாயக் கூலியாக வேலைப் பார்த்திருக்கிறார். மழைப் பொய்த்து, விவசாயம் இல்லாத காலங்களில்...
வாரணாசியில் அரசு அதிகாரியாக இருந்த அந்த ஆங்கிலேயரின் பெயர் பிராம்லி. அங்குள்ள ஒரு பூங்காவில் தனது மனைவியுடன் மாலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சாமியார் நிர்வாணமாகத் திகம்பரத் தோற்றத்தில் அவர்களைக் கடந்து சென்றார். தனது மனைவியுடன் நடந்து வரும்பொழுது இப்படியொரு ஆள் கடப்பது...
யோகா, தியானம் இந்த இரண்டுமே மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் வரங்கள். இவை நமது உடல், மனம் இரண்டினையும் சரிசெய்யும் சக்திவாய்ந்த கருவிகள். மூச்சுக் காற்று, உடல் இவற்றினை முறைப்படி கையாண்டு, எவ்விதம் வாழ்வாங்கு வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் கலைகள் இவை. இவற்றின் மேன்மையறிந்து வெளி நாட்டினரும்...
கருவூர் சாமியார், கருவூர் தேவர், கருவூர் நாயனார் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் கருவூரார். கொங்கு மண்டலத்தினைச் சேர்ந்த கருவூரில் பிறந்தவர் இவர். எனவே, பிறந்த ஊரின் பெயரோடு சேர்த்து கருவூரார் என அனைவராலும் குறிக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் குறித்த வரலாறு தெரியவில்லை. ஆனால், இவர்...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...
பொதுவாகவே சித்தர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தையும், அவர்களின் ஆயுள்காலத்தையும் நம்மால் மிகச்சரியாக கணித்து அறியவே முடியாது. சித்தர்கள் அவர்களின் விருப்பக்காலம் வரை, விருப்பப்பட்ட இடங்களில் வாழும் வரம் வாங்கியவர்கள். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் தோன்றவும், வாழவும் அவர்களால் முடியும். அவர்களின் வயது...
“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை...