உலகின் முக்கியமான நூறு சிந்தனையாளர்களில் ஒருவராக ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகை அரவிந்த் சுப்ரமணியத்தை அங்கீகரித்தது. மாஸ்டர் ஆஃப் மைண்ட் என இந்தியா டுடே கொண்டாடியது.
Tag - தமிழர்கள்
பொதுச்சேவையில் அக்கறைகொண்ட நாம் ஏன் அரசியலில் பங்கேற்கக்கூடாது என்ற கேள்விக்கான விடையாகப் புதிய கட்சியொன்று உதயமானது.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் உரையாடினார்.
சிங்கப்பூர் மக்கள் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்லர். எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழ்கிற நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்த்தது.
மனித குலத்துக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம்கொண்ட பிரியம்வதா, கருந்துளைகளை (Black holes) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பொதுமக்களிடையே குழப்பம் கலந்த அச்சத்தை விளைவிக்கக்கூடிய இந்த விவகாரத்தைச் சிறிது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது கல்விப் பயணமாகும். இது மாணவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் கல்வி முறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக...
பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது. கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம்...
ஜனவரி 12ம் தேதியை அயலகத் தமிழர் தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்து. அதன் முதல் சந்திப்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையுடன் கடந்த ஆண்டு அயலகத் தமிழர் தின விழா நடந்தது. இந்த 2023இல், அயலகத் தமிழர் தின விழா, அயலகத் தமிழர்கள் நேரில் ஒன்றுகூடும் நிகழ்வாக, தமிழ்நாடு...












