Home » இருவர் உள்ளம் (புதிய காப்பி)
இந்தியா

இருவர் உள்ளம் (புதிய காப்பி)

உத்தவ் தாக்ரே - ராஜ் தாக்ரே

மகாராஷ்ட்ராவில் இரண்டு பிரச்சினைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வு பிறந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதோடு, அங்கே தாக்ரே குடும்ப வாரிசுகளுக்கு இடையே நிலவி வந்த 20 வருடப் பகையும் முடிவுக்கு வந்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் 2024ஆம் டிசம்பரில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்திட்டங்களை அம்மாநிலத்தில் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கைப்படி அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் மொழிப் பாடம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதில் மூன்றாம் மொழியாக இந்தி மொழி கற்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மகாராஷ்ட்ர அரசியல் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான சிவசேனா (உத்தவ் பால் தாக்ரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), ராஜ் தாக்ரே தலைமையிலான மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா முதலிய கட்சிகளும், மராத்தி பாஷா சமிதி போன்ற மொழி அமைப்புகளும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர்.

இதில் சிவசேனாவும், நவநிர்மாண் சேனாவும் ‘மராத்தி மானூஸ்’, அதாவது ‘மராத்திய மண்ணின் மைந்தர்கள்’ எனப்படும் மொழியின வாதத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள். மராத்தி மொழிக்கு ஆதரவான பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!