Home » யார் இந்த ஜெகதீப் தன்கர்? ஏன் இந்த ராஜிநாமா?
இந்தியா

யார் இந்த ஜெகதீப் தன்கர்? ஏன் இந்த ராஜிநாமா?

ஜெகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் விலகியிருப்பது கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு அப்பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 75% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 2027 ஆகஸ்ட் மாதம் வரை அவர் பதவியில் தொடரலாம் என்றிருந்த சூழலில் உடல்நிலையைக் காரணம் காட்டிப் பதவி விலகியிருக்கிறார்.

ஜெகதீப் தன்கர் என்னும் பெயரை ஊடகங்கள் தொடர்ந்து உச்சரிக்கும் விதமாகப் பல அரசியல் சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்தார். 2019ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து ஆளும் கட்சிக்கு எதிராக அவருடைய தொந்தரவுகள் தொடர்ந்தன. மாநிலங்களவைத் தலைவராக எதிர்க்கட்சிகளோடு தொடர்ந்து முரண்பட்டார்.

சனாதன தர்மம், இந்திய அரசியலமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவந்தார். நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு உத்தரவு வழங்க முடியாது போன்ற கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றத்துக்கு எதிராக முன்வைத்தார். ஆனால் இப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!