காட்டிக்கொடுக்கும் காலடிகள்
அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அவளைக் கண்டபடி வெட்டிச்சாய்த்தான். கூட்டம் கூடுவதற்குள் அவ்விடத்தைவிட்டு ஓடியும்விட்டானவன்.
தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இச்சம்பவம். குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டான். விசாரணையில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த விபரீதக்கொலை அதுவென்று தெரியவந்தது. குற்றவாளியைத் தெளிவாக நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் கிடைக்கவில்லை. தடயவியல்துறை களத்திலிறங்கியது.
குற்றவாளியின் சட்டையில் இரத்தக்கறைகள் கண்டறியப்பட்டன. அவை கொலையுண்ட இளம்பெண்ணினுடையவைதானென உறுதிப்படுத்தியது டி.என்.ஏ. பிரிவு. சில கைரேகைத்தடங்களும் சாதகமாகக்கிடைத்தன. மேற்கொண்டு உறுதிசெய்துகொள்வதற்காக சி.சி.டி.வி. பதிவுகள் ஆராயப்பட்டன. சம்பவம் பதிவாகவில்லையென்றாலும் குற்றவாளி நடந்துவருவதுபோன்ற காணொளிக்காட்சிகள் அதிலிருந்தன.
Add Comment