தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ளது சுப்ரமணிய சுவாமி கோயில். இக்கோயில், முருகக் கடவுளின் இரண்டாவது படைவீடு. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகைதரும் இடம் இது. அதிலும் திருவிழாக்காலங்கள், முருகனுக்கு உகந்த விசேஷ நாள்கள் என்றால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி, கடல் அலைகளுக்குச் சவால் விடும். ‘கோயிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா?’ என்ற பாடல் வரிகள் இதனை உணர்த்துகிறது அல்லவா? சீசன் இல்லாத சமயங்களில் உள்வாங்கும் பக்தர் கூட்டம் போல அவ்வப்போது கடல்நீர் உள்வாங்குவதும் இக்கோயில் கடற்கரையில் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிகழ்வுகளின்போது சிலைகளும் சிற்பங்களும் பழைய கட்டட இடிபாடுகளும் அவ்வப்போது தென்படுகின்றன. சில நேரங்களில் தெய்வங்களின் சிலைகள் தென்படும்போது பக்தர்கள் பரவசமாகிறார்கள். சுப்ரமணிய சுவாமியின் அருளால் அவை புலப்பட்டன என்றும் சில பக்தர்கள் கூறுவதைக் கேட்கமுடிகிறது. முருகனின் மேல்கொண்ட பக்தியின் காரணமாகக் கடல்நீர் நெகிழ்ந்து பின்வாங்குவதாகவும் பக்தர்கள் சிலர் நம்புகின்றனர்.
உண்மையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல்நீர் அடிக்கடி உள்வாங்குவதன் காரணம் என்ன?














Add Comment