10 – புதிய முயற்சிகளும் பின்னடைவுகளும்
மக்களுடன் சேர்ந்து, நாடும் முன்னேற வேண்டுமென ஆசைப்பட்டார் குருஷவ். உணவு உற்பத்தி, பொருளாதாரம், இராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என அனைத்திலும் மேற்குலக வளர்ச்சியே அளவுகோலானது. இது மேற்குலகையும் எச்சரித்தது. போட்டிபோட்டு உருவாகின கண்டுபிடிப்புகள்.
சோவியத்தில் கலைஞர்கள் உருவானார்கள். அரசாங்க செய்தித் தொடர்பாளர்களைத் தாண்டி, கலைஞர்கள் உருவானார்கள். கம்யூனிசப் பரப்புரையை மீறி, உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டன. ஒரு கலைஞனின் உணர்வை, கலையின் மூலம் பார்வையாளனுக்குக் கடத்த முடிவதே, கலை எனப்படும். அத்தகைய எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், பாலே நடனக் கலைஞர்கள் உருவானார்கள். கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டது. இப்போதும் கட்டுப்பாடுகள் இருந்தன. ஸ்டாலின் காலத்தில் எல்லை மீறினால் சாவு ஒன்றே தண்டனை. இங்கு எல்லை மீறினால், கலை தடை செய்யப்படும். உயிர் விட்டுவைக்கப்படும்.
Add Comment