2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க பயணம் செய்வது மட்டுமே ஆட்சியைப் பெற்றுத்தந்துவிடும் என்ற எடப்பாடியின் நம்பிக்கையில் நாம் இப்போது கல்லெறிய வேண்டாம். வழக்கம்போல சீமான் தன்னுடைய வேட்பாளர்களை அறிவிக்கும் பணியைத் தொடங்கிவிட்டார். விசிகவும் காங்கிரசும் கூட்டணிக்கு வருவார்கள் எனக் காத்திருந்த தவெக, இப்போது வேறு கட்சிகளிலிருந்து ஆள்பிடிக்கத் தொடங்கிவிட்டது.
இவ்வளவு களேபரத்தில் இரண்டு முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் தமிழக அரசியலில் சத்தமில்லாமல் நடந்திருக்கின்றன. ஒன்று, தமிழருவி மணியன் இதுவரை கட்டிக்காத்த தன்னுடைய இயக்கத்தை வாசனின் கட்சியில் இணைத்திருக்கிறார். இரண்டாவதாக, விஜய்க்கெல்லாம் என்ன அரசியல் தெரியும் எனக் காணொளிகளில் பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கிறார்.














Add Comment