தேடலின் தலைவன்
வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என அழைக்கப்படுகிற அந்தத் தொலைபேசி அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாத்தா பாட்டியின் இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் அறிய வைத்தியசாலைக்குப் போய் இன்னும் பரிசோதனையின் முடிவுகள் வரவில்லை என்று சொல்லப்படும் போது இதற்காக ஒரு மணி நேரம் பயணத்தில் செலவிட்டோமே எனும் ஆதங்கம் இனியிருக்காது என உணர்ந்தான் அந்தச் சிறுவன். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் முடிவுகள் தயாராக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முடிவு வந்தபின்னர் போனால் போதும். வீணாக அலையத் தேவையில்லை. அனுபவத்தால் அவன் கண்டறிந்த இந்த ஒரு உதாரணமே தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் பயன் என்னவென்பதை தெளிவாகப் புரிய வைத்தது மட்டுமல்லாமல் அதன்மீது ஆர்வத்தையும் அதிகரித்தது.
Add Comment