பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க, இந்தியாவிலிருந்து ஒரு குழு நியூயார்க் சென்றுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற The Resistance Front (TRF) அமைப்பின் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவாக டிஆர்எப் கருதப்படுகிறது. டிஆர்எப் அமைப்பைத் தடை செய்யும் பொருட்டு முதல் படியாக ஐநா குழுவினருடனான இந்தச் சந்திப்பு நிகழ உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 சாங்க்ஷன்ஸ் குழு (1267 Sanctions Committee) 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அல்-கொய்தா, ஒசாமா பின்லேடன், தாலிபான்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான தடைகளையும் குற்றச்சாட்டுகளையும் மேற்பார்வையிடுவது சாங்க்ஷன்ஸ் குழுவின் முதன்மை நோக்கமாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் அது மற்ற பயங்கரவாத அமைப்புகளையும் அதன் துணை அமைப்புகளையும் உள்ளடக்கியதாக விரிவடைந்தது.














Add Comment