உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் நட்பையும், வர்த்தகத்தையும் தடையின்றி இனிதே புதுப்பித்துக் கொண்டன.
பெண் பார்க்கும் நிகழ்வில் பெண்ணின் தங்கை அழகாக இருந்ததால், அவரையே மணப்பெண்ணாக்கி திருமணம் செய்து கொண்ட கதையாய் முடிந்தது இந்தப் பேச்சுவார்த்தை. இதன் பலனாக ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் விரைவில் முடிவுக்கு வரும். இருநாட்டுத் தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும். முன்கூட்டியே இதை எதிர்பார்த்த வர்த்தக நிறுவனங்கள் ரஷ்யாவில் மூடியிருந்த தங்கள் கிளைகளை திறப்பதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
Add Comment