Home » உலகத்தர உப்புமா
உணவு

உலகத்தர உப்புமா

‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவை இந்தியச் சந்தையைப் பிடித்தன. வேறு வழியில்லாதபோதே வீடுகளிலும் ஹோட்டல்களிலும் உப்புமா சமைக்கப்படுகிறது. நானும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காகவே உப்புமாவைச் சமைத்துச் சுவைத்தேன் என்பதுதான் உண்மை. முயற்சி வீண்போகவில்லை.

முதலில் சாதத்தைப் பொடி செய்து மிதமாக வறுத்துச் சாப்பிடும் சுவையைத் தந்தது உப்புமா. உப்பும் மாவும் சேர்ந்த உப்புமா என்ற காரணப்பெயரை நியாயப்படுத்தியது. அடுத்தடுத்து உப்புமாவுடன் சேர்ந்த ஒவ்வொன்றும் புதிய சுவையைத் தந்தன. உதாரணத்துக்கு, வதக்கிய வெங்காயத்துடனும் கடலைப் பருப்புடனும் சேர்ந்தால் சாந்தமான உப்புமா, சண்டைக்குத் தயாரான உடன்பிறப்புகளைப் போலானது. அதுவே நிலக்கடலையின் மொறுமொறுப்புடன் ரவையின் மெதுமெதுப்பும் சேர்ந்தபோது மணமக்கள் கைகோர்த்துக் கொள்வது போலிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!