Home » உரி – 121
உரி நாள்தோறும்

உரி – 121

121. முழுப் புலையன்

காரோணத்தை அடுத்த தடாகத்தின் வடக்குப் படித்துறையில் சார்வாகனும் பாரதாய தத்தனும் அமர்ந்திருந்தார்கள். இரண்டு யாமங்கள் கடந்துவிட்ட அல்லிருள் தந்த துணிவினால்தான் தத்தன் அங்கே வரச் சம்மதித்திருந்தான். உண்மையில், சார்வாகன் தன்னை எதற்காக அங்கே அழைக்கிறான் என்பது புரியாமல், கேட்ட விநாடியே அங்கே மட்டும் வேண்டாம் ஐயனே என்று பதறிக்கொண்டு மறுக்கத்தான் பார்த்தான்.

தத்தனே, நீ உன் சிவனையும் மறந்து, என்னைத் தேடி வந்தவன். எது உன்னை அப்படிச் செய்யத் தூண்டியதென்று நானறியேன். ஆனால், நீ என்னோடு இருக்கும்வரை எது குறித்தும் யாரைக் குறித்தும் அச்சப்படத் தேவையிருக்காது. இது நான் உனக்களிக்கும் வாக்கு,

என்று சார்வாகன் சொன்னான்.

ஐயனே, உங்களை நானறிவேன். என் சிக்கல் அதுவல்ல. ஆனால் என் தந்தையோ, காரோணத்தினருகே வசிக்கும் வேறு யாரேனுமோ என்னைப் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள்.

உன்னைக் கண்டாலா? உன்னை என்னோடு சேர்த்துக் கண்டாலா?

ஆம். ஆனால் இனி அவ்விரண்டுக்கும் ஒரே பொருள் அல்லவா?

சார்வாகன் புன்னகை செய்தான். வா என்று இரு கரங்களையும் அகல விரித்து அவனை அழைத்தான். தத்தன் மெல்ல அவனை நெருங்கி வந்ததும் அப்படியே ஏந்தித் தழுவிக்கொண்டு விடுவித்துவிட்டுச் சொன்னான்,

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!