Home » ஏமன் போர் : முடிவற்ற பாதை
உலகம்

ஏமன் போர் : முடிவற்ற பாதை

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசும் உள்ளூர் புரட்சி இயக்கமான ஹூதிப் படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ. நா தலையீட்டில் இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குப் பிறகு சிறுசிறு உரசல்கள் இருந்தாலும், பெரிய அளவில் மோதல்கள் வெடிக்கவில்லை. தற்போதைய போர்ச்சூழல், உள்நாட்டு விவகாரத்திலிருந்து சர்வதேச அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஏமனில் 2014ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஹூதிக்கள் வடமேற்கு ஏமனையும் தலைநகரான சனாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எஞ்சிய பகுதியை ஏமன் அரசு ஆண்டு வந்தது. இப்போர் 2022 வரை நீண்டது.

2026 செப்டம்பர் 8 அன்று ஹூதிக்கள் சவுதி அரேபியாவின் விமானத் தளங்களைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து இருதரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஹூதிப் படைகள் செங்கடலிலுள்ள பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீர்வழிப் பாதையை நோக்கித் தாக்குதல் நடத்தியபோது நிலைமை மேலும் தீவிரமடைந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!