141. மிருகச் சிரம்
அவர்கள் தஞ்சப்புரியில் வசித்துவந்த வாலிபர்கள்தாம். அக்குழாத்தில் அனைத்து வர்ணத்தாரும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரொருவர் சிந்தையிலும் அந்த உணர்வில்லை. சார்வாகன் அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை விதித்திருந்தான்.
உங்கள் பாதம் பதிந்திருக்கும் நிலத்திலிருந்து ஓரங்குல உயரத்துக்கு எழும்பி நில்லுங்கள். அதிக நேரம் வேண்டாம். ஒரு விநாடிப் பொழுது நின்றால் போதும். அப்படி உங்களால் நிற்க முடிந்துவிட்டால் உங்கள் சாதியே உயர்ந்ததென நான் ஏற்றுக்கொண்டுவிடுவேன். மட்டுமல்லாமல், இங்குள்ள அத்தனை பேரையும் ஏற்றுக்கொண்டு உங்கள் தாள் பணியச் சொல்வேன்.
ஐயனே, அது எப்படி முடியும்?











Add Comment