வித்தைக்காரன்
ஆப்பிள் என்றால் ஜாப்ஸ். அதுபோல ஆன்டிவைரஸ் என்றால் ஜான் மெக்காஃபி. இப்படியுமா ஒரு மனிதரின் வாழ்க்கை இருக்கும் என்று வியக்க வைக்கும் கதை அவருடையது.
மால்வேர்களை எதிர்த்து முதல் ஆன்டிவைரஸை உருவாக்கியவர் மெக்காஃபி. அவருடைய பெயரிலேயே அந்த ஆன்டிவைரஸ் வெளிவந்தது. McAfee. உங்கள் கணினியில் கூட இதன் ஒரு பிரதி இருந்திருக்க வாய்ப்புண்டு.
தொடக்கத்தில் வைரஸ்கள் விடலைப் பையன்கள் போலச் சின்னச் சின்ன சேட்டைகள் செய்துவந்தன. முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். ஏதேனும் செய்தி சொல்லிவிட்டு ஓடிவிடுவது. பின்னர் அதைத் துரத்திப் பிடிக்க ஆன்டிவைரஸ் என்றிருந்தது.
ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. வைரஸ்கள் தரும் இன்னல்கள் அதிகரித்தன. ப்ரைன் வைரஸ் வந்தபோது பலராலும் இது உணரப்பட்டது.











Add Comment