நூற்றுக் கணக்கான பெண் எழுத்தாளர்கள் எழுதிக்குவிக்கும் காலமாக இது இருக்கிறது. வாரப் பத்திரிகைகளும் சரி, சிற்றிதழ் வட்டமும் சரி. இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. கிண்டல் செய்ய மட்டும் அவ்வப்போது மாத நாவல் எழுதும் பெண் எழுத்தாளர்களை இழுப்பார்கள். ஆனால் லட்சக் கணக்கான தமிழ் வாசகர்களின் விருப்பத்துக்குரிய ஆசிரியர்களாக இவர்களே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாவலும் ஆயிரக் கணக்கில் விற்கிறது. ஒவ்வொரு எழுத்தாளரும் சொந்தமாகப் பதிப்பகம் தொடங்கி, தமது நூல்களைத் தாமே வெளியிட்டுக்கொள்கிறார்கள். அந்தளவு நம்பகமான வருமானம் தரத்தக்க துறையாகவும் இது மாறியிருக்கிறது.
எப்படி இது சாத்தியமானது?
Add Comment