ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு பாடல்தான். வெற்றிகரமான அறிமுகமாக இருந்தாலும் தொடர்ந்து அவர் பாடல்கள் எழுதாததன் காரணம் தெரியவில்லை. இவரது பாடல் வெளியானதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து போன டி.ஆர்.ராஜலஷ்மி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய ‘மிஸ் கமலா’ என்ற படம் 1936-ல் வெளியானது. நாடகத்தில் நடித்து பிறகு திரைப்படங்களிலும் நடித்தவர். முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்துள்ளார்.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment