Home » ஆசான் – 27
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 27

27. மேடையேற்றம்

கோகலே முதன்முதலாகப் பேச்சாளராக மேடையேறியது 1885ல், கோலாப்பூர் நகரில்.

அந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்றவர், கோலாப்பூரின் பிரிட்டிஷ் பிரதிநிதியான (Resident) வில்லியம் லீ வார்னர். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற தலைப்பில் இளைஞர் கோகலே வழங்கிய உரை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய அழகான ஆங்கிலத்தையும், தகவல்களை அவர் தொகுத்துக் கையாண்ட விதத்தையும் பார்வையாளர்கள் ரசித்துக் கை தட்டினார்கள். வார்னரும் கோகலேவின் ஆற்றல் மிக்க உரையைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அதன்பிறகும் கோகலே சில கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருப்பார். ஆனால், 1888 நவம்பரில் நடைபெற்ற பம்பாய்ப் பிராந்தியக் கருத்தரங்கம்தான் அவரை ஒரு முதன்மையான பேச்சாளராக அறிமுகப்படுத்தி வெளிச்சம் பாய்ச்சியது.

இந்தக் கருத்தரங்கத்தில்தான் அடுத்து வரப்போகிற அலகாபாத் காங்கிரஸுக்கான (1888 டிசம்பர்) பம்பாய்ப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோகலே இதில் ஒரு முதன்மையான தீர்மானத்தை முன்வைத்துப் பேசினார், கருத்தரங்கின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!