ஜாப்ஸ் 2.0
நெக்ஸ்ட் கணினிகளின் விற்பனை தொடங்கியது. ஜாப்ஸின் சொல்வன்மை நெக்ஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல நிலைமை வேறுவிதமாக மாறியது.
ஜாப்ஸைப் பொறுத்தவரை தனது கணினிகளுக்குப் போட்டியே இல்லை. அவை தனிப்பிறவிகள். சக்தி வாய்ந்த வொர்க் ஸ்டேஷனாக ஒருபுறம், அணுக்கமான பெர்சனல் கம்ப்யூட்டராக மறுபுறம். இப்படியாக இன்னொரு கணினி கிடையாது என்று ஜாப்ஸ் சொல்லி வந்தார்.
இது பொய்யல்ல. சக்தியும் எளிமையும் கலந்த கலவையாக இருந்தன நெக்ஸ்ட் கணினிகள். ஆனாலும் ஒரு பெரிய சிக்கல். அது பயனாளர்களை நெக்ஸ்ட் கணினிகளிலிருந்து தூர அழைத்துச் சென்றது.
நெக்ஸ்ட் கணினிகளில் இயங்கும் சாஃப்ட்வேர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்குக் காரணம் அவை வடிவமைக்கப்பட்டிருந்த விதம். வேறு எந்த சாஃப்ட்வேரும் அவற்றில் இயங்காது என்று ஜாப்ஸ் அறிவித்திருந்தார். சாஃப்ட்வேர், ஹார்ட்வேர் இரண்டுமே எங்கள் வசம். இவ்வாறிருந்தால்தான் பயனாளர்களுக்குச் சிறப்பான கணினி அனுபவத்தை வழங்க முடியும் என்று நம்பினார் ஜாப்ஸ்.















Add Comment