டிம் குக்
ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக இருந்தது. திரும்பி வந்த முதல் வருடத்திலேயே iMAC. இதுபோக, அவருடைய மேற்பார்வையில் புத்தம்புதிய விளம்பரங்கள். இவை ஆப்பிளின் இமேஜை மீட்டெடுக்க உதவின.
ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய புதிதில் ஜாப்ஸ் மிகவும் உக்கிரமாக இருந்தார். நிஜ உலகுடன் தொடர்பற்ற ஒரு மனிதர் போலக் காணப்பட்டார். தன் கனவுகளை நனவாக்குவது ஒன்றே குறிக்கோள்.
அதன் காரணமாக அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அவர் ஆப்பிளை விட்டு வெளியே செல்லும் அளவுக்குப் போனது. காலம் அவரைக் கொஞ்சம் கனிய வைத்திருந்தது.
அத்தனைக்கும் ஆசைப்படாமல் ‘இவை எனது நோக்கங்கள்’ என்று வரையறுத்துக்கொண்டார். முதல் இன்னிங்ஸில் அவர் வாஸ்நியாக்கைத் தவிர ஒருவரையும் நம்பியது கிடையாது.
இதிலும் மாற்றம் வந்திருந்தது. அனைத்தையும் தானே செய்யத் தேவையில்லை. மிகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து வேலைகளை அவர்களிடம் ஒப்படைப்பது சிறப்பு என்னும் புரிதலுக்கு வந்திருந்தார்.















Add Comment