Home » கொழும்பு புத்தகக் கண்காட்சி 2025 – நேரடி விசிட்
புத்தகக் காட்சி

கொழும்பு புத்தகக் கண்காட்சி 2025 – நேரடி விசிட்

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான இந்தக் கண்காட்சி பத்து நாட்கள் நடைபெற்று அக்டோபர் 06ஆம் திகதி நிறைவடையும்.

1999ஆம் ஆண்டு 34 விற்பனைக் கூடங்களுடன் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமானது. முதலாவது கண்காட்சி அந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நான்காம் திகதி வரை நடைபெற்றது. அப்போது கொழும்பிலுள்ள தேசிய கலாபவனத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டில் இருந்து புத்தகக் கண்காட்சி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

40 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கைப் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம், 26ஆவது தடவையாக இந்த ஆண்டு கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே அரசாங்கத்தை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்து புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. புத்தகங்களுக்கான VAT வரியை நீக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் புத்தகங்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் புத்தக மூலப் பொருட்களுக்கும் 18 சதவீத VAT எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி விதிக்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!