உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற முகலாயப் படைத்தலைவர் கட்டியது பாபர் மசூதி. ஏற்கெனவே அங்கிருந்த இராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் அம்மசூதி கட்டப்பட்டதெனப் பெரும்பாலான இந்துக்கள் நம்புகின்றனர்.
1980ஆம் ஆண்டில் விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி போன்றவை மசூதி அமைந்திருந்த இடத்தை மீட்கும் போராட்டங்களை முன்னெடுத்தன. 1989ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் அயோத்திச் சிக்கலைக் கையிலெடுத்தது பாஜக. அதன்பொருட்டு, அப்போதைய பாஜக தலைவராக இருந்த எல்.கே.அத்வானி நாடெங்கிலும் ரத யாத்திரை மேற்கொண்டார்.















Add Comment