Home » 1947 – 1956: நவீன இந்தியக் கட்டமைப்பு
இந்தியா200

1947 – 1956: நவீன இந்தியக் கட்டமைப்பு

1947 முதல் 1956 வரையிலான பத்தாண்டுகள் நவீன இந்தியாவைக் கட்டமைக்க உதவிய மிக முக்கியமான காலகட்டம். சுமார் இருநூறாண்டுக் கால பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்தரம் கிடைத்தது. அந்தச் சுதந்தரமும் பாகிஸ்தான் பிரிவினை என்னும் ஆறாத் துயரத்தோடு வந்து சேர்ந்தது. மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வும், கட்டுக்கடங்காத. வன்முறையும் வரலாற்றில் பதிவாகின. அந்தச் சோகம் வடிவதற்கு முன்னால் இன்னொரு துயரச் சம்பவமும் நடந்தேறியது. மக்களைத் திரட்டிச் சுதந்தரப் போராட்டத்தை ஒருங்கிணைத்த மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே என்னும் இந்துத்துவவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காந்தி விட்டுப்போன தேசத்தை ஒன்றிணைக்கும் வேலை அடுத்தகட்டத் தலைவர்களிடம் வந்து சேர்ந்தது. பலவாறாகச் சிதறுண்டு கிடந்த பகுதிகள் இந்தியா என்னும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக் குழு, இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது. அதனடிப்படையில் இந்தியா ஜனநாயகக் குடியரசு நாடாக மாறியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டக்குழு உருவாக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!