இந்தியா, பெரும்பான்மைவாதத்தை வேகமாகத் தழுவிக்கொண்ட பத்தாண்டுகளாக 2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம்.
2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இந்தப் போக்கின் முக்கியமான புள்ளி. இருபத்து நான்கு மணிநேரச் செய்திகள் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்தது அச்சம். இதில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ஆம் ஆண்டு தூக்கிலிடப்படும் வரையிலும், அதன் பிறகும் இத்தாக்குதல் உளவியல் ஆயுதமாக மாறியது. இந்துச் சமூகம் ஆபத்தில் இருப்பதாக நம்பாதோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. சிறுபான்மையினர் உரிமைகளுக்கு ஆதரவாகப் பேசுவோர் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளைவிட இந்திய முஸ்லிம்களே எதிரிகள் என்கிற பிரசாரத்தை இந்திய வலதுசாரிகள் கையிலெடுத்தபோது சமூக வலைத்தள அல்காரிதங்கள் அதற்கு ஆதரவு கொடுத்தன. வாட்சப் யூனிவர்சிட்டிகளின் வழியாக இஸ்லாமிய வெறுப்பு மெதுவாக இந்தியக் கடைக்கோடி கிராமங்கள் வரை நுழைந்தது.















Add Comment